சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்தது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், கருணாநிதி மீது மாறாத அன்பு கொண்டவரும், ‘கேப்டன்’ விஜயகாந்த் உருவாக்கிய இயக்கம் இன்று கூட்டணியில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது அக்கட்சியை வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் பிரேமலதாவையும், நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்றார். கருப்பு சிவப்பு கொடியை தாங்கியுள்ள தேமுதிகின் நல்வரவு, நல்லுறவாக தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி தொடரவும், தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறவும் இணைந்து செயல்படுவோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
