இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் டிடிபி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், ராணுவ வீரர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பினர், பாகிஸ்தானில் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கைபர் பக்துங்வா மாகாணத்தின் பஜவூர் மாவட்டம் மலங்கி பகுதியில் உள்ள சோதனைச் சாவடி மீது வெடிபொருள் நிரம்பிய வாகனம் ஒன்று மோதி வெடிக்கச் செய்யப்பட்டது.
இந்த தாக்குதலில் செக் போஸ்ட் முழுவதும் தரைமட்டமானது. அருகிலிருந்த மதரஸா கட்டடமும் இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உட்பட, மொத்தம் 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
