புதுடில்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை காங்கிரஸ் கட்சி மக்களவை செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளது.
சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்களென எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், அவரை மாற்றும் நோக்கத்துடன் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் குறித்து மக்களவையில் எந்த நாளில் விவாதம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சபாநாயகர் ஓம் பிர்லா சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் பிரதமர் மோடியை தாக்க திட்டம் தீட்டப்பட்டதாகவும், சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்த சம்பவங்கள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில் எதிர்க்கட்சிகளில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
