லோக்சபா (பிப்ரவரி 06) காலை 11 மணிக்கு கூடியதும், எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு அவையில் பேச மறுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சித் எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் 5-வது நாளாக சபை முடங்கி உள்ளது.
ஜனாதிபதி திருவௌபதி முர்மு உரையுடன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் மாதம் 28-ஆம் தேதி துவங்கியது. கடந்த 1-ஆம் தேதி 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் மத்திய அமைச்சர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் பேசினர்.
பிரதமர் மோடியின் உரையை எதிர்க்கட்சித் எம்பிக்கள் முழக்கத்தால் நடத்த விடாமல், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
8 எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம், எதிர்க்கட்சித் தலைவருக்கு அவையில் பேச மறுப்பு, இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் காரணமாக எம்பிக்கள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டனர். பதாகைகளை ஏந்தி அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டதால், அவையில் கூச்சல் மற்றும் குழப்பமான சூழல் நீடித்தது.
சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்பிக்கள் கேட்டுக்கொள்ளாது இருப்பதால், அமளி தொடர்ந்ததால் வரும் பிப்ரவரி 9ம் தேதி காலை 11 மணி வரை லோக்சபாவை ஒத்திவைக்கிறார்.
