சென்னை: ராஜராஜ சோழனை பெருமைக்குரிய முன்னோராகப் பார்க்கிறேன் என விமர்சித்து இருந்த திருமாவளவன்-க்கு, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதில் அளித்துள்ளார்.
‘ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாசாரம் அழிவதற்கும் வழி வகுத்தவர்கள்’ என சோழ மன்னர்கள் குறித்து திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான் பதிலளிக்கையில், இதில் கருத்து ஒன்றும் இல்லை என்றும், ராஜராஜ சோழனை தன்னுடைய பெருமைக்குரிய முன்னோராகவே பார்க்கிறேன் என்றும் கூறினார். அரசனுக்கெல்லாம் அரசன் என்ற அடையாளத்துடன் அருண்மொழிச் சோழன் என்ற பெயர் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்படி இருக்கும்போது அவரை அந்தப் பெயரிலேயே அழைக்க வேண்டியதுதானே என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். ஈ.வெ.ரா-வுக்கு ‘ராமசாமி’ என்ற பெயர் இருந்ததே, அந்தப் பெயரை மாற்றினாரா என்றும், ஒரு பெயரையே மாற்றாதவரை சமூகத்தை மாற்றியவர் என பேசிக்கொண்டு அலைகிறீர்கள் என்றும் சீமான் விமர்சித்தார்.
