ஜெருசலேம்: பிரதமர் நரேந்திர மோடி, ஒன்பது ஆண்டுகளுக்கு பின், இரண்டு நாள் அரசுமுறை பயணமாக மேற்காசிய நாடான இஸ்ரேல் செல்ல உள்ளார்.
இஸ்ரேலுடன் ராணுவத் தளவாடங்கள் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா வலுவான உறவை பேணிவருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புடன் நடந்த போரின்போது, பல உலக நாடுகள் இஸ்ரேலை கண்டித்தன. அப்போது இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை கடைபிடித்தது.
இந்நிலையிலும், இந்தியா – இஸ்ரேல் இருதரப்பு உறவுகள் வழக்கம் போல் வலுவாக தொடர்கின்றன. இந்த சூழலில், பிரதமர் மோடி வரும் 25ம் தேதி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “பார்லிமென்ட் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அதில் இந்திய பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்தியா ஒரு சக்திவாய்ந்த நாடு,” என தெரிவித்தார்.
