சென்னை: வீட்டை விட்டு வெளியே வராத விஜய் மக்களை எப்படி சந்திப்பார் என தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொது மக்களிடம் மிகப்பெரிய பொய்யை கூறியுள்ளார். மகளிருக்கு 5,000 ரூபாய் அறிவித்தது வேடிக்கையாக உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பல கோடைகாலங்கள் வந்துள்ளன. அப்போது 1,000 ரூபாய் வழங்கப்படவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு 2,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் முதல்வர் இந்த தொகையை அறிவித்துள்ளார். அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வராது. மத்திய அரசு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முடக்குவதாக முதல்வர் கூறுவது பொய்யாகும்.
தவெக தலைவர் விஜய் குறித்து அவர் கூறியதாவது: வீட்டை விட்டு வெளியே வராதவரால் மக்களை எப்படி சந்திக்க முடியும்.
