ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 169/2 ரன்கள் குவித்தது.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணியில் தனியாளாகப் போராடிய மாட் ரென்ஷா 65 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் டக் அவுட் ஆனார்கள்.
ஜிம்பாப்வே அணியின் முஜர்பானி 4 விக்கெட்டுகளும், பிராட் எவான்ஸ் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினர்.
முன்னதாக 2007 உலகக் கோப்பையிலும் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
