சென்னை:
தேச பாதுகாப்புக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ அதிகாரிகளை நினைவுகூரும் வகையில், அவர்களது பெயர்களை ரயில் இன்ஜின்களுக்கு சூட்டும் முயற்சியை இந்திய ரயில்வே நடைமுறைப்படுத்தி வருகிறது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வீரமரணம் அடைந்த அதிகாரிகள் மற்றும் வீரர்களை கவுரவிக்கும் நோக்கில், 2023ஆம் ஆண்டு இந்த திட்டத்தை ரயில்வே தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக, வடக்கு ரயில்வேக்கு உட்பட்ட லக்னோ லோகோ பணிமனையில் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்த இன்ஜின்களுக்கு, நாட்டிற்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன.
இந்த முயற்சி பின்னர் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 25க்கும் அதிகமான சக்திவாய்ந்த ரயில் இன்ஜின்களுக்கு ராணுவ அதிகாரிகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
