தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சிவலிங்கம், பீகார் மாநிலம் சென்றடைந்துள்ளது.
33 அடி உயரமும், 210 டன் எடையும் கொண்ட இந்த பிரமாண்ட சிவலிங்கம், மாமல்லபுரம் பகுதியில் உருவாக்கப்பட்டது. இந்த சிவலிங்கம், பீகார் மாநிலம் சம்பரண் மாவட்டம் பகுதியில் கட்டப்பட்டு வரும் விராட் ராமாயண் கோவிலில் நிறுவப்பட உள்ளது.
இந்த நிலையில், இந்த பிரமாண்ட சிவலிங்கம் பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் நகரை வந்தடைந்தது. இதனை அறிந்த அப்பகுதி பக்தர்கள் ஒன்று கூடி, பக்தி முழக்கங்கள் எழுப்பி சிவலிங்கத்திற்கு வழிபாடு செய்தனர்.
தமிழக சிற்பக்கலையின் பெருமையை வெளிப்படுத்தும் இந்த பிரமாண்ட சிவலிங்கம், இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
