பிப்ரவரி 1-ம் தேதி பார்லிமென்டில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பான ஆலோசனையாக அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
2025–26 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், பல மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு, வளர்ச்சி திட்டங்கள், வருவாய் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநில நிதி அமைச்சர்கள் தங்களின் பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28, 2026 முதல் தொடங்குவதற்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களின் கருத்துகளை கேட்டறிந்து பட்ஜெட் தயாரிக்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
