புதுடில்லி: தவறான தகவல்களை பரப்புவது மற்றும் நாடகங்களை அரங்கேற்றுவதை தவிர ராகுல், காங்கிரஸ் வேறு எதையும் செய்யவில்லை. பிளவுபடுத்தும் அரசியலை ராகுல் செய்கிறார் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா விவசாயிகளின் நலன்களில் ஒருபோதும் சமரசம் செய்யாது. விவசாயிகளின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படுகின்றன.
தவறான தகவல்களை பரப்புவது மற்றும் நாடகங்களை அரங்கேற்றுவதை தவிர ராகுல், காங்கிரஸ் வேறு எதையும் செய்யவில்லை. பிளவுபடுத்தும் அரசியலை ராகுல் செய்கிறார். விவசாயிகளின் உண்மையான கவலைகளை நிவர்த்தி செய்ய அவர்கள் எதுவும் செய்யவில்லை.
இந்தியாவின் உலகளாவிய சாதனைகளை குறைத்து மதிப்பிடவும், மக்கள் மற்றும் இளைஞர்களின் நம்பிக்கையை பாதிக்கவும் முயற்சி செய்கின்றனர். இவர்களின் நடவடிக்கைகள் தேசத்திற்கு அம்பலமாகியுள்ளன.
காங்கிரஸ் தனது தவறுகளை சரிசெய்ய மறுக்கிறது. வளர்ச்சியை விட பிரிவினையை முன்னிறுத்துகிறது. இது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது. தேசமும் மக்களும் தொடர்ந்து முன்னேறுவார்கள் என தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
