மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போன்ற தோற்றத்தில், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. “மாதம் ₹22,000 முதலீடு செய்தால் ₹15 லட்சம் வருமானம்” கிடைக்கும் எனக் கூறப்படும் இந்த விளம்பரம் முற்றிலும் போலியானது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பி.ஐ.பி. குழு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட விளக்கத்தில், “மத்திய அமைச்சரோ அல்லது அரசோ இதுபோன்ற எந்த முதலீட்டு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. மக்களை திசைதிருப்பவும், பணத்தை பறிக்கவும் திட்டமிட்டு பரப்பப்படும் மோசடி வீடியோ இது,” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த பிரபலமானவர்களின் பெயரை பயன்படுத்தி, குறுகிய காலத்தில் அதிக வருமானம் கிடைக்கும் என ஆசை காட்டும் மோசடிகளில் சிக்க வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
