புதுடில்லி: தமிழகத்தில் தேஜ கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: திருச்சியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளேன்.
மேலும் 89 ஊரக சாலை திட்டங்களையும் துவக்கி வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்பின் மாலை 6.30 மணியளவில் திருச்சியில் நடைபெறும் தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் தமிழக கூட்டணி தலைவர்களுடன் சேர்ந்து பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் தேஜ கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதை கண்டு திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக அரசின் தவறான நிர்வாகமும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும் குறித்து தமிழக மக்கள் நன்கு அறிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தும் தேஜ கூட்டணியின் திட்டங்களுக்கு மக்கள் அதிகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
