சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன், தி.மு.க. அரசு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டினார்.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் எதிர்கால வளர்ச்சி நோக்கிலான புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட விஷயங்களையே மீண்டும் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் மற்றும் தி.மு.க. தலைவர்கள் வாக்குறுதி நிறைவேற்றம் குறித்து வழங்கும் சதவீதத் தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து, தி.மு.க. அரசு அளித்த வாக்குறுதிகளை தொகுத்து ஆய்வு செய்து, எவை நிறைவேற்றப்பட்டன, எவை நிறைவேற்றப்படவில்லை என்பதை பா.ஜ. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மதிப்பீடு செய்ததாக நயினார் நாகேந்திரன் விளக்கினார்.
அந்த மதிப்பீட்டின் அடிப்படையில், ‘கிட்டத்தட்ட 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை; இந்த அரசு ஆல் பெயில்’ என அவர் விமர்சித்தார்.
மேலும், சட்டசபை மற்றும் அரசு நிர்வாகம் தேர்தல் நோக்கில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
