சென்னை: தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக வலைதளத்தில் தமிழில் பதிவு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று மாலை அமித் ஷா தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். தொடர்ந்து, புதுக்கோட்டையில் நடைபெறும் நயினார் நாகேந்திரன்-இன் பிரசார நிறைவு விழாவில் பங்கேற்று, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் தமிழில் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர்.
‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பேரணி பல லட்சக்கணக்கான மக்களை இணைத்துள்ளதாகவும், அதன் நிறைவு விழாவையொட்டி இன்று புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகளுடன் உரையாற்ற உள்ளதாகவும் அமித் ஷா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
