சென்னை: 2026–2027ம் ஆண்டிற்கான தமிழக இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் வெளியாகியுள்ளன. மாநில வளர்ச்சி, சமூக நலன் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டை மையமாகக் கொண்டு பல்வேறு துறைகளுக்கு கணிசமான தொகைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,471 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு ரூ.17,088 கோடி, ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடி மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் நலன் துறைக்கு ரூ.28,827 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்திட்டங்களுக்கு ரூ.5,463 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி, தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,996 கோடி மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.219 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நதிகள் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.374 கோடி, நீர்வளத்துறைக்கு ரூ.10,076 கோடி மற்றும் எரிசக்தி துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1,634 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு மானியத்திற்கு ரூ.14,000 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில், கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ.17,086 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறைக்கு ரூ.1,394 கோடி, கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறைக்கு ரூ.4,435 கோடி, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறைக்கு ரூ.7,547 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பொதுப்பணி துறைக்கு ரூ.1,694 கோடி, நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.21,132 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.11,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. கைத்தறி மற்றும் கதர் துறைக்கும் ரூ.1,943 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால பட்ஜெட்டின் மூலம் கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு துறைகள் முக்கிய முன்னுரிமை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
