சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதப்படை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாசம், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் டிஜிபி ஜெயராம், ஊர்க்காவல் படை மற்றும் சிவில் டிபென்ஸ் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி கூடுதல் கமிஷனராக இருந்த ஐஜி பவானீஸ்வரி, சென்னை தலைமையிட ஐஜியாக பதவி ஏற்றுள்ளார். ரயில்வே ஐஜி பாபு, போலீஸ் நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை ஆயுதப்படை பிரிவு டிஐஜி விஜயலட்சுமி, திருச்சி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கோவை டிஐஜி சசிமோகன், திண்டுக்கல் சரக டிஐஜியாகவும், திண்டுக்கல் டிஐஜி சாமிநாதன், கோவை டிஐஜியாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நெல்லை கமிஷனர் மணிவண்ணன், ராமநாதபுரம் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய தேஷ்முக் சேகர் சஞ்சய், நெல்லை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை தொழில்நுட்ப பிரிவு டிஐஜி ஜெயந்தி, தாம்பரம் இணை கமிஷனராகவும், ஜெயலட்சுமி தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் பல எஸ்.பி. மற்றும் துணை கமிஷனர் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பிக்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
