புதுடெல்லி: டி20 உலகக் கோப்பை தொடரின் 18-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். பாண்ட்யா 28 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார்.
நமீபியா அணியின் ஜெர்ஹார்டு எராமஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணியில் ஸ்டீன் கேம்ப் 29 ரன்களும், ஜேன் பிரிலிங்க் 22 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், நமீபியா 18.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளும், பாண்ட்யா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
