சென்னை: டில்லியின் ஆணவ அரசியலுக்கு தமிழகம் எப்போதும் கட்டுப்படாத மாநிலமாகவே இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தி எழுத்துகள் அகற்றப்பட்டது மட்டுமல்ல, ஆதிக்க மனப்பான்மையுடன் வெளிப்படும் ஆணவ அரசியலுக்கும் எதிரான நடவடிக்கையாக இது பார்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும், உள்ளத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியில் வேறொரு நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு போலியான தமிழ்ப்பற்று காட்டுபவர்களையும் அவர் விமர்சித்தார்.
அதுபோல், அடிமைத்தனமான மனப்பான்மையுடன் இத்தகைய நடவடிக்கைகளுக்கு துணை நிற்பவர்களும் தமிழகத்திற்கு துரோகம் செய்பவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய செயல்பாடுகளை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும், அவ்வாறானவர்களை மக்கள் அரசியல் ரீதியாக அகற்றிவிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும், டில்லியில் இருந்து வரும் ஆணவ அரசியலுக்கு தமிழகம் எப்போதும் கட்டுப்பாட்டுக்கு உட்படாது என்றும் தனது பதிவில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
