திருச்சி: தமிழகத்தில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்றும், அதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறிய தகவல்கள் தவறானவை என்றும் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுவது முழுமையாக தவறான தகவல். ஒருமுறை சிலிண்டர் பெற்ற பிறகு, அடுத்த 20 நாட்கள் கடந்த பிறகே மீண்டும் முன்பதிவு செய்யும் வகையில் கணினி தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.
நான் ஒரு காஸ் சிலிண்டர் டீலர் என்பதால் உறுதியாக கூறுகிறேன்; மாநிலத்தில் எங்கும் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை. 20 நாட்களுக்குள் யாருக்காவது சிலிண்டர் தேவைப்பட்டாலும் நான் ஏற்பாடு செய்து தர முடியும்.
நீங்கள் எங்கு முன்பதிவு செய்தீர்களோ அங்கிருந்தே சிலிண்டர் வழங்கப்படும். எங்கு வேண்டுமானாலும் சிலிண்டர் வழங்க ஏற்பாடு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் ஹோட்டல்களில் உணவு அளவு குறைக்கப்பட்டதற்கும் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறியிருக்கலாம் என்றும் அவர் விமர்சித்தார்.
உலகளவில் போர் நிலைமைகள் இருந்தாலும் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி அல்லது கட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் பாஜ சார்பிலும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும் வாக்குறுதிகள் வழங்கப்படும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தா
