சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய துணை தேர்தல் கமிஷனர்கள் தமிழகம் வந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி புதுடில்லி திரும்பினர். இதனால், தேர்தல் தேதி எப்போது வெளியாகும் என அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்பில் உள்ளன.
இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய அரசின் CAPF அமைப்பின் 50 படைகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.
இந்த படைகள் மார்ச் 10ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
