சென்னை: தி.மு.க. கூட்டத்தில் எம்.பி. தயாநிதி கூறிய கருத்து அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோவை மக்களை அவமதித்ததாக குற்றம்சாட்டி, தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், கோவை மக்களை இழிவாக சித்தரிக்கும் வகையில் பேச்சு இடம்பெற்றதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தயாநிதி தனது பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், உழைப்பால் தமிழக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கோவை மக்களை அவமதிப்பது தவறு என தெரிவித்துள்ளார்.
அதேபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணி, கோவை மக்களை இழிவுபடுத்திய பேச்சுக்கு வன்மையான கண்டனம் தெரிவித்தார். கோவை மக்களின் வரலாறு உழைப்பும், வளர்ச்சியும் சார்ந்தது என்றும், இதுபோன்ற கருத்துகள் தேவையற்ற விவாதங்களை உருவாக்கும் என்றும் கூறினார்.
தயாநிதி தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும், கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு அரசியல் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
