சென்னை: தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரளாவிலும் திமுகவினர் கொள்ளையடிக்க தொடங்கியுள்ளனர் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதி திமுக மாணவர் அணி செயலாளர் ரமேஷ், கேரள மாநிலம் பந்தளம் பகுதியில் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் வீட்டில் 55 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் கேரள மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் கிரகாம் பெல்லின் உதவியாளராகவும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் கே.என். நேருவுக்கு நெருக்கமான நபராகவும் அறியப்படுபவர் ரமேஷ் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைக் கொள்ளையடிப்பது போதாதென்று, அண்டை மாநிலமான கேரளாவிலும் சென்று கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் திமுகவினர். மேலும், இந்த ரமேஷ் உள்ளிட்ட திமுகவினரின் செயல்பாடுகள் குறித்து கேரள மாநில போலீசார் விசாரணையில் தெரியவரும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
