காசா அமைதி திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடி இந்த அமைதித் திட்டத்தில் ஆர்வம் காட்டியதாக கூறினார்.
மேலும், ரஷ்யா மற்றும் சீனா காசா அமைதி வாரியத்தில் இணையும் வாய்ப்பு இருப்பதாகவும், ஈரானும் இதில் பங்கேற்க வேண்டிய நேரம் இது என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
காசா அமைதி வாரியத்தின் செயல்பாடுகள், நிதி மற்றும் வெளிப்படைத்தன்மை கொள்கைகள் குறித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். அமைதி வாரிய உறுப்பினர்களிடமிருந்து காசா நிவாரண நிதிக்கு 7 பில்லியன் டாலர்களுக்கு மேல் வழங்க உறுதி எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும், ஐநா பொதுச் செயலாளருடன் நல்ல உறவு உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
இதனுடன், ஈரானின் அணு ஆயுதம் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். மத்திய கிழக்கு பிராந்திய நிலைமை குறித்தும், பல உலக தலைவர்களுடன் உள்ள உறவுகள் குறித்தும் டிரம்ப் கருத்து பகிர்ந்தார்.
