ஏஐ உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்தை 24 மணி நேரத்திற்கு மேலாகியும் ராகுல் இன்னும் கண்டிக்காதது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கையில், காங்கிரஸ் கட்சி மீண்டும் நாட்டின் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். பல லட்சம் பார்வையாளர்களை ஈர்த்த நிகழ்வில் நாட்டை அவமானப்படுத்தும் முயற்சியில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினார்.
ஏஐ உச்சி மாநாடு மூலம் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வளவு பெரிய முதலீடுகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் எதிர்காலத்தின் மீது உலகம் வைத்திருக்கும் நம்பிக்கையே இதன் மூலம் வெளிப்படுகிறது என கூறிய அவர், இந்தியாவின் ஏஐ முன்னேற்றத்தை உலகம் பாராட்டும் நேரத்தில், காங்கிரஸ் கட்சி நாட்டு நலனுக்கு மேலாக நாடகத்தைத் தேர்ந்தெடுத்ததாக விமர்சித்தார்.
