ஜான்சி: டில்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சி மாநாட்டின் போது காங்கிரஸ் இளைஞரணி தொண்டர்கள் நடத்திய போராட்டம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான இந்த சர்வதேச மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிபுணர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மாநாட்டை ஒட்டிய கண்காட்சி அரங்கிற்குள் திடீரென நுழைந்த காங்கிரஸ் இளைஞரணி தொண்டர்கள், பிரதமர் மோடியை விமர்சித்து முழக்கங்கள் எழுப்பினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
சம்பவம் தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உபி., முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், அரசியல் விமர்சனங்கள் ஜனநாயகத்தில் இயல்பானவை என்றாலும், சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்ற மேடையில் நாட்டின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்துவது சரியல்ல என்றார்.
மேலும், இத்தகைய நடவடிக்கைகளை தவிர்த்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
