Colombia தலைநகர் பொகாட்டோவில், அமெரிக்க அதிபர் Donald Trump-ஐ கடுமையாக விமர்சித்த கொலம்பியா அதிபர் Gustavo Petro,
“முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்; உங்களுக்காக நான் காத்திருக்கிறேன்” என வெளிப்படையான அறைகூவல் விடுத்துள்ளார்.
கடந்த வாரம் Venezuela நாட்டிற்குள் அதிரடியாக நுழைந்த அமெரிக்க சிறப்பு படையினர், அந்நாட்டு அதிபர் Nicolás Maduro மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸை கைது செய்து, New York நகரில் உள்ள சிறையில் அடைத்தனர்.
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வெனிசுலாவின் துணை அதிபராக இருந்த Delcy Rodríguez இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.
இந்த அமெரிக்க நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், அதிபர் டிரம்பை நேரடியாக சாடிய கொலம்பியா அதிபர் பெட்ரோ,
“டிரம்ப் ஒரு கோழை. அவர்கள் குண்டு வீசினால், இங்குள்ள மக்கள் கொரில்லாக்களாக மாறுவார்கள். நான் மீண்டும் ஆயுதம் ஏந்தமாட்டேன் என்று சபதம் செய்திருந்தாலும், தாய்நாட்டுக்காக தேவைப்பட்டால் மீண்டும் ஆயுதம் எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.
