டெல் அவிவ்: ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் காட்சிகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றம் தீவிரமடைந்த நிலையில், டெஹ்ரானில் பல இடங்களில் குண்டுவீச்சு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணுசக்தி நிலையங்கள், ஏவுகணை தளங்கள், ராணுவ முகாம்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், மேற்குத் ஈரானில் நூற்றுக்கணக்கான இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும், ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
