வாஷிங்டன்: ஈரான் எந்த வகையிலான தாக்குதலையும் மேற்கொண்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் பழிவாங்கும் நோக்கில் தாக்குதல் நடத்த முயன்றால் அதற்கு கடுமையான பதிலடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தாக்குதல் மேற்கொண்டால் அதன் விளைவுகள் தீவிரமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் பதிலளிக்கையில், கமேனி உயிரிழப்பு பெரும் குற்றமாகும் என்றும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி வழங்காமல் ஈரான் அமைதியாக இருக்காது என்றும் தெரிவித்தார்.
ஈரான் தரப்பில் வழங்கப்படும் பதிலடி, இஸ்லாமிய உலக வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மேலும் தீவிரமடைந்து வருவதாகக் கருதப்படுகிறது.
