நியூயார்க்/டெஹ்ரான்: ஈரான் ஆட்சியாளரும் மதகுருவுமான கமேனி போரில் உயிரிழந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். முதலில் இந்த தகவலை மறுத்த ஈரான், பின்னர் அவரது மரணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
கமேனி வசித்த மாளிகை மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. துல்லியமான தாக்குதலின் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், கமேனி கொல்லப்பட்டதாகவும், இது ஈரான் மக்களுக்கு புதிய வாய்ப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீதான தாக்குதல்கள் இன்னும் சில நாட்கள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, கமேனி மறைவுக்கு ஈரான் அரசு 40 நாட்கள் பொது துக்கம் அறிவித்துள்ளது. மேலும் 7 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கமேனியின் குடும்ப உறுப்பினர்களும் தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
