புதுடில்லி: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 10 கோடி பின்தொடர்பவர்களை கடந்த முதல் அரசியல்வாதி என்ற சாதனையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
2014 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த அவர், தொடர்ந்து செயல்பாட்டுடன் பதிவுகளை பகிர்ந்து வருகிறார். தற்போதைய கணக்குப்படி, 100 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்துள்ளார்.
உலக அளவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 43.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார். இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ 15 மில்லியன், பிரேசில் அதிபர் 14.4 மில்லியன், துருக்கிய அதிபர் தையிப் எர்டோகன் 11.6 மில்லியன், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேய் 5.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அரசியல்வாதிகளில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 16.1 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் 12.5 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
