புதுடில்லி: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராடும் தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், தனது நண்பர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியதாகவும், அவருக்கும் இஸ்ரேல் மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், வரும் ஆண்டில் இந்தியா–இஸ்ரேல் இடையிலான பிராந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பிராந்திய நிலைமை தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாகவும், பயங்கரவாதத்தை அதிக உறுதியுடன் எதிர்த்து போராடுவதற்கான இருநாடுகளின் பகிரப்பட்ட தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
