புதுடெல்லி: டெல்லியில் ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் போட்டியில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் குமார் வெள்ளிப் பதக்கமும், அகில் ஷியரோன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
இந்த மூன்று இந்திய வீரர்களும் குழு போட்டியில் 1769 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றனர்.
