விருதுநகர்: மதிமுக எம்பி துரை வைகோ, அரசியல் குறித்து தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்தார்.
விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “எனக்கு அரசியலே பிடிக்காது. இதை பலமுறை கூறியுள்ளேன். அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது விருப்பம் இல்லை. அரசியல்வாதியாக ஆக வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. ஆனால், காலச் சூழ்நிலை என்னை அரசியலுக்கு கொண்டு வந்தது.
எம்.பி. பதவியை நான் தேடிச் செல்லவில்லை; அது தானாக வந்தது. அரசியல் களத்தில் நான் சந்தோஷமாக இல்லை. நாள் தோறும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறேன். இருப்பினும், கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும், ஆதாயம் இல்லாத சேவையை செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்தேன்,” என்றார்.
