குவஹாத்தி: அசாமில் ஆளும் பாஜ அரசு, 40 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.9,000 அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பாஜ அரசு செயல்பட்டு வருகிறது. இங்கு ‘ஒருனோடோய்’ என்ற வறுமை ஒழிப்பு திட்டம் 2020 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் தகுதியான பெண்ணுக்கு மாதந்தோறும் ரூ.1,250 அரசு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் ஜனவரி மாதம் முதல் நான்கு மாதங்களுக்கான தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என்றும், அசாம் புத்தாண்டான ‘போகா பிகு’ திருவிழாவை முன்னிட்டு கூடுதலாக ரூ.4,000 வழங்கப்படும் என்றும் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்திருந்தார்.
அதன்படி ‘ஒருனோடோய்’ திட்டத்தின் கீழ் 40 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.9,000 அவர்கள் வங்கி கணக்கில் நேற்று நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
