புதுடில்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய பிரகலாத் ஜோஷி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது: ராகுல் ஒரு முதிர்ச்சியற்ற பகுதிநேர அரசியல்வாதி. நேற்று அவர் அவையில் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை.
அவையில் ராகுல் குற்றச்சாட்டுகள்:
தொழிலதிபர் அனில் அம்பானி ஏன் சிறையில் இல்லை. எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகவும் ராகுல் லோக்சபாவில் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கே மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதிலடி கொடுத்துள்ளார்.
ராகுல் vs பிரகலாத் ஜோஷி:
பார்லி வளாகத்தில் நேற்று மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் சென்ற ராகுலின் செயல் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
ராகுல் ஜாலியாக, “வாருங்கள், நாம் அனைவரும் ஒன்றாக நிற்போம். ஒன்றாக பேட்டிக்கொடுப்போம்” என்று கூறினார். ஆனால் அவர்கள் விலகிச் சென்றனர். பின்னரும் ராகுல், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகலாத் ஜோஷி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
