ஜெருசலேம்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற திட்டத்தை பின்பற்றி, இஸ்ரேலில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பல நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்த வகையில், மேற்காசிய நாடான இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள மோஷாவ் நெவாடிம் பகுதியில், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ‘து பிஷ்வாட்’ என அழைக்கப்படும், யூதர்கள் கொண்டாடும் மரங்களின் புத்தாண்டு பண்டிகையை ஒட்டி, அங்கு 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த மரநடுகை நிகழ்வை இந்திய தூதரகம் மற்றும் இஸ்ரேலின் வன அமைப்பான கெரென் கயமெட் லெஇஸ்ரேல் இணைந்து நடத்தின.
