புதுடில்லி: மத்திய பட்ஜெட் 2026ன் எதிரொலியாக பல்வேறு பொருட்களின் விலைகள் குறையவுள்ளன. அதேபோல், சில பொருட்களின் விலைகள் உயரவும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, மத்திய பட்ஜெட் 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் உரை நண்பகல் 12.20 மணிக்கு நிறைவடைந்தது. பாதுகாப்புத் துறைக்கு கடந்த ஆண்டை விட கூடுதலான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு தொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்புகளின் எதிரொலியாக, விலை குறையும் மற்றும் விலை உயரும் பொருட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
விலை குறையும் பொருட்கள்
-
நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கான 17 வகையான மருந்துகள்
-
கடல் உணவு
-
தோல் பொருட்கள்
-
ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட்டுகள்
-
மின்வாகன (EV) பேட்டரிகள்
-
சூரியஒளி மின்கலன்கள்
-
மைக்ரோவேவ் ஓவன்
-
விளையாட்டு உபகரணங்கள்
-
தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் நுகர்வோர் மின்னணு பொருட்கள்
