புதுடில்லி:
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெறும் என, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை மேற்கண்ட காலகட்டத்தில் நடத்துவதற்கு திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் மேலும், இந்த கூட்டத்தொடரின் முதல் கட்டம் பிப்ரவரி 13ம் தேதி முடிவடையும் என்றும், அதன் பின்னர் மார்ச் 9ம் தேதி பார்லிமென்ட் மீண்டும் கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில், ஆக்கப்பூர்வமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
