வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டுத் தெரிவித்தார்.
இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது: இந்தியா என்னை மகிழ்ச்சியடையச் செய்ய விரும்பியது. பிரதமர் மோடி மிகச்சிறந்த மனிதர், ஒரு நல்ல மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்கு தெரியும். என்னை மகிழ்ச்சியடையச் செய்வது முக்கியம் என்றார்.
மேலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விலையை விட இந்தியா மீது விதிக்கப்படும் வரிகளை உயர்த்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருகிறது. ரஷ்ய பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் உண்மையில் மிக மோசமான நிலையில் இருப்பது வெனிசுலாவின் பொருளாதாரம். நான் இதுவரை பார்த்ததிலேயே மோசமான பொருளாதாரம் அது என டிரம்ப் கூறினார்.
சமீபத்தில், ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் வீட்டை உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து டிரம்ப் கூறுகையில், “ரஷ்ய ட்ரோன் கதை முற்றிலும் பொய். உக்ரைன், புடின் வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தவில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்,” என்றார்.
