கொழும்பு: டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் நடந்த முக்கியமான லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி நியூசிலாந்தை திரில் முறையில் வீழ்த்தியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 39 ரன்கள், டிம் சைபர்ட் 35 ரன்கள், பின் ஆலன் 29 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து பக்கம் அடில் ரஷித், வில் ஜாக்ஸ், ரேஹான் அகமது தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
160 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும் போட்டியை கட்டுக்குள் வைத்தது. டாம் பாண்டன் 33 ரன்கள், ஹாரி புரூக் 26 ரன்கள் எடுத்தனர்.
கடைசி 3 ஓவர்களில் 43 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரேஹான் அகமது அதிரடியாக விளையாடி சிக்சர், பவுண்டரிகளால் ஆட்டத்தை மாற்றினார். இறுதியில், 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வில் ஜாக்ஸ் 32 ரன்கள், ரேஹான் அகமது 7 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பக்கம் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
