நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு வணிக வாகனங்களை ஓட்டுவதற்கான டிரைவர்ஸ் லைசென்ஸ் வழங்குவதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகள் ஓட்டும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன என டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். 2024ஆம் ஆண்டு 18 சக்கர வணிக லாரி விபத்தில் டெலிலா கோல்மேன் என்ற 7 வயது சிறுமி கடுமையாக காயமடைந்த சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார்.
பார்லிமென்டில் உரையாற்றிய டிரம்ப், அந்த சிறுமியின் பெயரில் ‘டெலிலா சட்டம்’ என்ற பெயரில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார். ஆங்கிலம் அறியாதவர்கள், சாலை விதிகளை புரிந்துகொள்ள முடியாதவர்கள் வணிக வாகனங்களை ஓட்டுவது பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தாகும் எனவும் தெரிவித்தார்.
எந்த மாநிலமும் சட்டவிரோத குடியேறிகளுக்கு கமெர்ஷியல் டிரைவர்ஸ் லைசென்ஸ் வழங்கக் கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
