மதுரை: ஊழல் நிரம்பிய திமுக ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற உள்ள பிரதமர் Narendra Modi அவர்களின் பொதுக்கூட்டம் மற்றும் மத்திய அரசின் நகாய், ரயில்வே திட்ட தொடக்க நிகழ்ச்சிகளை முன்னிட்டு பியூஷ் கோயல் மதுரைக்கு வந்தார். பிரதமர் திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளதாகவும், ரிங் ரோடு அருகே மண்டேலா நகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டது.
நிருபர்களிடம் பேசிய அவர், “தமிழர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை திமுக அரசு பாதித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றாதது அவமானம். திமுக ஆட்சியை மக்கள் நிராகரிப்பார்கள்” என்றார்.
மேலும், அதிமுக–பாஜ கூட்டணி குடும்பம் போன்ற உறவுடன் செயல்படுகிறது என்றும், தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர்–ஜெயலலிதா ஆட்சி மாதிரி நல்ல நிர்வாகம் அமையும் என்றும் தெரிவித்தார். தே.ஜ. கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கையும் வெளியிட்டார்.
