வாஷிங்டன்: ஈரான் நிபந்தனையின்றி சரணடையும் வரை அந்த நாட்டுடன் எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யப்படாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
ஈரான் நிபந்தனையின்றி சரணடையும் வரை அந்நாட்டுடன் ஒப்பந்தம் கிடையாது. அதன் பின்னர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் நல்ல தலைவர்களாகிய நாங்கள், எங்கள் கூட்டாளிகள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து ஈரானை அழிவின் நிலைமையிலிருந்து மீட்டெடுக்க முயற்சிப்போம்.
மேலும் பொருளாதார ரீதியாக ஈரானை பெரியதாகவும் வலிமையான நாடாகவும் மாற்றுவதற்கு தொடர்ந்து செயல்படுவோம். ஈரானுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அந்த நாட்டை மீண்டும் உருவாக்குவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் தற்போது 7வது நாளை கடந்துள்ளது. இந்த மோதலை நிறுத்த மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக ஈரான் அதிபர் முன்னதாக தெரிவித்திருந்தார். ஆனால், மத்தியஸ்த நாடுகள் போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் தான் பேச வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் தான் ஈரான் சரணடையும் வரை ஒப்பந்தம் செய்ய முடியாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
