வாஷிங்டன்: ஈரானில் நடைபெறும் அமைதியான போராட்டங்களை அந்த அரசு வன்முறையால் அடக்க முயன்றால், அமெரிக்கா தலையிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் பணவீக்கத்தை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில், டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு துப்பாக்கிச் சூடு நடத்தினால் அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அமைதியான போராட்டங்களை வன்முறையால் அடக்க முயன்றால் அமெரிக்கா தலையிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஈரானின் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் அலி லாரி ஜானி, ஈரான் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது முழு பிராந்தியத்திற்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை டிரம்ப் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
