ஜெரூசலம்: ஈரானில் உள்ள ஆயிரக்கணக்கான “பயங்கரவாத இலக்குகள்” மீது அடுத்த சில நாட்களில் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களில் ஈரான் ஆட்சியாளர் கமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இஸ்ரேல் தரப்பில் ராணுவ நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெதன்யாகு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், ஈரான் மக்கள் கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்து விடுபடும் சூழலை உருவாக்குவோம் என்று கூறினார். ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருமுறை மட்டுமே இத்தகைய வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரான் மக்களிடம் ஒன்றுபட்டு தங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கும் தருணம் இது எனவும், அவர்களின் தியாகங்கள் வீண் போகாது எனவும் நெதன்யாகு கூறியுள்ளார்.
இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகள் தொடரும் நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது.
