டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகின்றன. இந்த தாக்குதல்களில் இதுவரை 555 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் தொடங்கியது.
இந்த தாக்குதல்களில் ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக அணுசக்தி நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் ஈரான் ஆட்சியாளர் கமேனியின் இல்லம் மற்றும் அலுவலகம் அமைந்த பகுதிகளும் கடுமையாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்களில் கமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களால் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நாட்டின் 131 நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
