டெஹ்ரான்: ஈரான் ஆட்சியாளர் கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாட்டின் இடைக்கால தலைவராக அயதுல்லா அலிரேசா அராபி நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் கமேனி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரானில் 40 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் 7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரான் அரசியலமைப்புச் சட்டத்தின் படி புதிய நிரந்தர தலைவர் தேர்வு செய்யப்படும் வரை, இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது. அயதுல்லா அராபி தலைமையிலான கவுன்சில் நாட்டை வழிநடத்தும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கவுன்சிலில் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மற்றும் தலைமை நீதிபதி கோலாம் ஹொசைன் மொஹ்சேனி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
