இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என அதிபர் Donald Trump தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் வெளிநாடுகளுக்கு நிலக்கரி ஏற்றுமதியை கணிசமாக அதிகரிப்பதையும், அமெரிக்காவின் ஏற்றுமதி திறனை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது நிலக்கரி ஏற்றுமதியை அதிகரிக்கும். மேலும், அமெரிக்காவை முன்னணி எரிசக்தி சப்ளையராக மாற்றும். உலகின் முதன்மையான எரிசக்தி உற்பத்தியாளராக அமெரிக்கா மாறியுள்ளது. நமது நிலக்கரியின் தரம் உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு சிறந்ததாக இருக்க வேண்டும்.
இந்தியாவைத் தவிர, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடனும் அமெரிக்கா ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதுடில்லி: இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
